என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அஷ்ரப் கனி
நீங்கள் தேடியது "அஷ்ரப் கனி"
பாகிஸ்தான் பெயரைக்குறிப்பிடாமல், ஆப்கானிஸ்தான் உள் விவகாரங்களில் பிற நாடுகளின் தலையீடு கூடாது என்பதை 8 நாடுகளும் ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியா, ரஷியா, ஈரான், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் கலந்து கொண்ட பாதுகாப்பு பேச்சுவார்த்தை, டெல்லியில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சீனாவையும், பாகிஸ்தானையும் இந்தியா அழைத்தும் அந்த நாடுகள் கலந்து கொள்ளவில்லை. இந்த பேச்சுவார்த்தையை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல் தொடங்கி வைத்து பேசினார். இந்த கூட்டத்தில் இந்தியா உள்பட 8 நாடுகள் சேர்ந்து கூட்டு பிரகடனம் வெளியிட்டன. அதில், “ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதற்கு, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு, பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டுவதற்கு, பயங்கரவாத செயல்களுக்கு நிதி அளிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது” என கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பெயரைக்குறிப்பிடாமல், ஆப்கானிஸ்தான் உள் விவகாரங்களில் பிற நாடுகளின் தலையீடு கூடாது என்பதை 8 நாடுகளும் ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலாவுடன் ரஷியா, ஈரான், 5 மத்திய ஆசிய நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் கடைகளில், சந்தைகளில் அமெரிக்க டாலர் பரவலாக புழக்கத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. எந்த நேரமும் துப்பாக்கியும், கையுமாக அலைந்து கொண்டிருக்கிற தலிபான்களின் நிர்வாகம் அங்கு வந்து விட்டது. தலிபான்கள் அங்கு ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததைத்தொடர்ந்து, பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஆப்கானிஸ்தானின் வெளிநாட்டு சொத்துகளை அமெரிக்க ரிசர்வ் வங்கியும், ஐரோப்பிய மத்திய வங்கிகளும் முடக்கி உள்ளன. சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கூட ஆப்கானிஸ்தானுக்கு எந்த நிதி உதவியும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டன.
இதனால் ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. இந்த நிலையில் புதிய நெருக்கடியாக, அங்கு வெளிநாட்டு பணத்தை பயன்படுத்துவதற்கு தலிபான்கள் அதிரடியாக தடை விதித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அனைத்து குடிமக்களும், கடைக்காரர்களும், வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், பொதுமக்களும் இனி எல்லா பரிமாற்றங்களையும் ஆப்கானியைக்கொண்டு (ஆப்கானிஸ்தான் பணம்) மட்டுமே செய்ய வேண்டும். வெளிநாட்டு பணங்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. யாரேனும் மீறி பயன்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது வரும்” என கூறி உள்ளார். பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலிபான்கள் கூறி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடைகளில், சந்தைகளில் அமெரிக்க டாலர் பரவலாக புழக்கத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலகுமா?
ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியின் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வதாக தலிபான் அமைப்பு இன்று அறிவித்துள்ளது. #AshrafGhani #Taliban
காபூல் :
ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் இஸ்லாம் மார்க்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர்.
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரம்ஜான் கொண்டாடப்படும் தினத்துக்கு முன்னதாக 5 நாட்கள் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் நிறுத்தப்படுவதாகவும், இதர வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் என ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், 3 நாள் போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக இன்று தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது. தலிபான் அமைப்பு அறிவித்துள்ள போர் நிறுத்தம் எந்த நாளில் துவங்கும் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. #AshrafGhani #Taliban

இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்திய 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி சமீபத்தில் அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரம்ஜான் கொண்டாடப்படும் தினத்துக்கு முன்னதாக 5 நாட்கள் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் நிறுத்தப்படுவதாகவும், இதர வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் என ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், 3 நாள் போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக இன்று தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது. தலிபான் அமைப்பு அறிவித்துள்ள போர் நிறுத்தம் எந்த நாளில் துவங்கும் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. #AshrafGhani #Taliban
ரம்ஜான் நோன்பை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தாலிபன் பயங்கரவாதிகளுக்கு எதிரான தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். #AshrafGhani #Taliban
காபூல் :
ஆப்கானிஸ்தான் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிபர் அஷ்ரப் கனி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் அஷ்ரப் கனி இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது :-
ரம்ஜான் கொண்டாடப்படும் தினத்துக்கு முன்னதாக 5 நாட்கள் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் நிறுத்தப்படுகிறது. அதே சமயம், இன்ன பிற வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் என ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வன்முறை மற்றும் போரினால் மக்களின் மனதை வெல்ல முடியாது. மாறாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது மக்களிடம் இருந்து தலிபான்களை இன்னும் அந்நியப்படுத்தவே செய்யும் என்பதை தலிபான் அமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, இந்த தற்காலிக போர் நிறுத்தம் அவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ஆனால், இந்த போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா ? இல்லையா ? என்பது பற்றி தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #AshrafGhani #Taliban
×

X